தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தமிழ்நாட்டை கூறுபோட்டு விற்பதற்காகவே ஆட்சிக்கு வரத் துடிக்கும் ஸ்டாலின்!' - தமிழ்நாட்டை கூறுபோட்டு விற்க ஸ்டாலின் ஆட்சிக்கு வரத் துடிக்கிறார்

திருநெல்வேலி: தமிழ்நாட்டை கூறுபோட்டு விற்பதற்காகவே ஸ்டாலின் ஆட்சிக்கு வரத் துடிக்கிறார் என அமைச்சர் உதயகுமார் திருநெல்வேலியில் நடந்த கூட்டத்தில் பேசினார்.

minister udhayakumar
minister udhayakumar

By

Published : Dec 19, 2020, 6:14 AM IST

திருநெல்வேலி மாவட்ட அதிமுக ஒன்றியச் செயலாளர்கள், பகுதிச் செயலாளர்கள், சார்பு அணி செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், பிற மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில், ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் ராஜலட்சுமி, கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

வீணாய் போகும் கமல்

பின்னர் ஆலோசனைக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயகுமார், "தமிழ்நாட்டில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் சிறப்பான ஆட்சி நடந்துவருகிறது. ஆனால் வெற்றிடம் என்று சொல்லிக்கொண்டு இங்கே சிலர் வீணாய் போவதற்காக வந்துகொண்டிருக்கிறார்கள். நான் ஏதோ ஆறுதல் சொல்வதற்காகவோ ஜோதிடம் சொல்வதற்காகவோ இங்கு வரவில்லை.

துடிக்கும் ஸ்டாலின்

தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டதன் அடிப்படையில் அதிமுக அரசுக்கு ஆதரவு அலை நாடு முழுவதும் வீசிவருகிறது. 2021ஆம் ஆண்டில் அதிமுக 50ஆம் ஆண்டில் அடியெடுத்துவைக்கிறது. இந்த நல்ல நேரத்தில் அதிமுக ஆட்சியமைக்க நாம் அனைவரும் சூளுரை ஏற்க வேண்டும். எந்தக் கொம்பனாலும் அதிமுகவை தொட்டுப் பார்க்க முடியாது.

தமிழ்நாட்டை கூறுபோட ஸ்டாலின் ஆட்சிக்கு வரத் துடிக்கிறார்

அவர்கள் எதற்காக ஆட்சிக்கு வரத் துடிக்கிறார்கள், தமிழ்நாட்டை கூறுபோட்டு அதிகாரப் பங்கீடு, குடும்பப் பங்கீடு செய்வதற்காகவே ஆட்சிக்கு வரத் துடிக்கிறார்கள்" என்றார்.

இதையும் படிங்க:டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டம்: ஸ்டாலின் உட்பட 1600 பேர் மீது வழக்குப்பதிவு

ABOUT THE AUTHOR

...view details