தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக வேட்பாளரை ஆதரித்து நாங்குனேரியில் வாக்கு சேகரித்த அமைச்சர் உதயகுமார்! - minister udayakumar

திருநெல்வேலி: தமிழ்நாடு வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டார்.

அமைச்சர் உதயகுமார்

By

Published : Oct 8, 2019, 8:41 AM IST

நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கவிருப்பதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், கட்சி பிரமுகர்கள் நாங்குநேரி தொகுதியில் பல்வேறு பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதிக்குள்பட்ட அரியகுளம் பகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நாராயணனை ஆதரித்து தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பரப்புரையில் ஈடுபட்டார்.

பரப்புரையில் ஈடுபட்ட அமைச்சர் உதயகுமார்

பரப்புரையின்போது கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர். இதில் பேசிய அமைச்சர் உதயகுமார், அதிமுகவின் வேட்பாளர் உங்கள் ஊரில் ஒருவர், ஆனால் காங்கிரஸ் கட்சி அதன் வேட்பாளரை எங்கிருந்தோ இறக்குமதி செய்துள்ளது என்று கூறினார். மேலும் இடைத்தேர்தலில் வெற்றிபெற்றதும் ஒவ்வொரு தொண்டர்களின் வீடுகளுக்கும் வந்து நன்றி தெரிவிப்பார் என்றும் உதயகுமார் கூறினார்.


இதையும் படிங்க: மனைவிக்காக கர்ப்பிணியாக மாறிய தொப்பை கணவர்- வைரல் புகைப்படங்கள்

ABOUT THE AUTHOR

...view details