நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அடுத்து அமைந்துள்ளது சிங்கம்பட்டி ஜமீன். இதற்கு 32ஆவது ஜமீன்தார் பட்டம் பெற்றவரும் மன்னராட்சி காலத்தில் முடிசூடிய தமிழகத்தின் கடைசி ராஜாவுமான சுந்தர முருகதாஸ் தீர்த்தபதி, நேற்றிரவு வயது முதிர்வு காரணமாக காலமானார்.
சிங்கம்பட்டி ஜமீன் மறைவு: அமைச்சர் உதயகுமார் நேரில் அஞ்சலி
திருநெல்வேலி: தமிழ்நாட்டின் கடைசி ராஜாவும், நெல்லை மாவட்டம் சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் 32ஆவது ராஜாவுமான முருகதாஸ் தீர்த்தபதி மறைவுக்கு வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
udhayakumar
இவருக்கு தனது ஆறாம் வயதில் ராஜாவாக முடிசூட்டப்பட்டது. முருகதாஸ் தீர்த்தபதிக்கு மகன்கள் மகேஸ்வரன், சங்கராத் பஜன், மகள்கள் அபராஜிதா, சுபத்ரா, மெளலிகேஸ்வரி ஆகியோர் உள்ளனர்.
இந்நிலையில், இவரது மறைவுக்கு ஊர் பொதுமக்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோரது சார்பாக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஜமீன்தார் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.