தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அணுக்கழிவு மையம் குறித்து மக்களிடம் கருத்துக் கேட்கப்படும்..!' - கடம்பூர் ராஜூ

திருநெல்வேலி: கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பது குறித்து மக்களின் கருத்துகளை கேட்டறிந்த பின்னரே முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

கடம்பூர் ராஜு

By

Published : Jun 9, 2019, 8:49 AM IST

தமிழ்நாடு செய்தி; விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, நேற்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பது குறித்து மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படும்.

மக்கள் கூறும் கருத்துகளின் அடிப்படையிலேயே இது குறித்து முடிவு எடுக்கப்படும். மக்களின் கருத்தைக் கேட்காமல் ஒருபோதும் மையம் அமைக்கப்படாது.

இந்தியாவிலேயே பிரதமரை அதிகமாகத் தரம் தாழ்ந்து விமர்சித்தவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். 37 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு எந்தத் திட்டமும் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவர முடியாது. ஸ்டாலினின் ஒரே குறிக்கோள் முதலமைச்சர் ஆவதுதான், அது ஒருபோதும் நடக்காது.

தமிழ்நாட்டில் குதிரை பேரம் மூலம் வெற்றியும் பெறமுடியாது. பாரதிய ஜனதா ஆட்சியில் தமிழர்களின் உரிமைகள் பாதிக்கப்படவில்லை. பாரதிய ஜனதா ஆட்சியில்தான் தமிழ்நாட்டில் தீர்க்க முடியாத சிக்ல்களான ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது" என்றார்.

அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்கள் சந்திப்பு

மேலும் தகவல்களுக்கு:கூடங்குளத்தில் அணுக்கழிவை சேமிப்பது, தமிழ்நாட்டை வஞ்சிக்கும் செயல்' - ஸ்டாலின்!

ABOUT THE AUTHOR

...view details