தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திறந்த பாலத்தையே மீண்டும் திறந்த திமுகவினர்; அதிமுக எம்எல்ஏவை எதிர்ப்பதாக காமெடி - Ambasamudram AIADMK MLA Isaki Subpaiah

தென்காசி அருகே அம்பாசமுத்திரத்தில் உள்ள ஒரே பாலத்தை அதிமுக, திமுவினர் திறந்து வைத்ததால் அப்பகுதி மக்கள் குழப்பமடைந்தனர்.

அம்பாசமுத்திரத்தில் நடைபெற்று வந்த புதிய பாலத்தை அமைச்சர் இசக்கி சுப்பையா ஆய்வு
அம்பாசமுத்திரத்தில் நடைபெற்று வந்த புதிய பாலத்தை அமைச்சர் இசக்கி சுப்பையா ஆய்வு

By

Published : Nov 7, 2022, 10:43 PM IST

திருநெல்வேலி:தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் அம்பாசமுத்திரம் அருகே புதிய பாலம் கட்டும் பணி மற்றும் சாலை பணிகளை ஆய்வு செய்ய வந்த அம்பாசமுத்திரம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா அம்பாசமுத்திரம் யூனியன் அலுவலகத்தில் நடைபெறும் புதிய கட்டடப் பணிகளையும் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் அம்பாசமுத்திரம் பகுதியில் சுமார் ரூ.1 கோடியே 32 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விரிவுப்படுத்தப்பட்ட புதிய பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இதற்கிடையில் இதுகுறித்து தகவலறிந்த திமுக தொண்டர்கள் மற்றும் திமுகவைச் சேர்ந்த அம்பாசமுத்திரம் நகராட்சி தலைவர் கே.கே.சி பிரபாகரன் ஆகியோர், அதிமுக எம்எல்ஏவுக்கு போட்டியாக அதே புதிய பாலத்தினை பட்டாசுகளை வெடித்து திறந்து வைத்தனர்.

ஒரே பாலத்தை அதிமுக மற்றும் திமுவினர் திறந்து வைத்ததால் அப்பகுதி மக்கள் குழப்பமடைந்தனர். ஆளுங்கட்சி எதிர்கட்சி நிர்வாகிகள் தங்களுக்குள் இருக்கும் அரசியல் சண்டையால் ஒருங்கிணைப்பு இல்லாமல் இது போன்று நடந்து கொண்ட சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

திறந்த பாலத்தையே மீண்டும் திறந்த திமுகவினர்; அதிமுக எம்எல்ஏவை எதிர்ப்பதாக காமெடி

இதையும் படிங்க:10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details