திருநெல்வேலி:திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணிகள் துறை அமைச்சர் ஏ.வ.வேலு உள்ளிட்டோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வு கூட்டத்தில், அமைச்சர்கள் மனோ தங்கராஜ், ராஜகண்ணப்பன், அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ஏ.வ.வேலு "நெல்லையில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருடம் முழுவதும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு பாத யாத்திரை செல்வதாகவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமையாகும் எனவும் குரிப்பிட்டார். மேலும், அதற்காக அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டு, முதலமைச்சரின் அனுமதியுடன் பக்தர்களுக்கென தனி நடைப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதி அளித்தார்.