தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆளுநருக்கு இருக்கும் ஒரே வேலை வேலையற்ற வேலை: அமைச்சர் துரைமுருகன் விளாசல்! - Nellai news

ஆளுநருக்கு இருக்கும் ஒரே வேலை என்பது வேலையற்ற வேலை என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

அரசு எழுதிக் கொடுப்பதை வாசிப்பது ஆளுநரின் தலையெழுத்து.. அமைச்சர் துரைமுருகன் காட்டம்
அரசு எழுதிக் கொடுப்பதை வாசிப்பது ஆளுநரின் தலையெழுத்து.. அமைச்சர் துரைமுருகன் காட்டம்

By

Published : May 9, 2023, 1:29 PM IST

அமைச்சர் துரைமுருகன் காட்டமான பேச்சு

திருநெல்வேலி: திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய அமைச்சர் துரைமுருகன், “தாமிரபரணியில் ஓடும் ஆறுதான் தமிழனின் ஆறு.

இந்த ஒன்றுதான் எங்கும் பிரச்னை இல்லாமல் இருக்கும் ஆறு. தற்போது நமக்கு எதிரிகளே இல்லை. எதிர்கட்சித் தலைவராக தமிழ்நாட்டின் ஆளுநர் செயல்படுகிறார். ஈபிஎஸ் சிவனேனு இருக்கிறார். ஓபிஎஸ் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. எதிரிகள் இல்லாத அரசியலை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.

இதை இரண்டு ஆண்டு சாதனை என்று சொல்ல முடியாது. ஆட்சியில் புதுமுகங்கள், அவர்கள் துறைகளை புரியவே ஆறு மாதம் ஆகிவிட்டது. கரோனா ஒரு ஆறு மாதம் என அதில் ஓராண்டு ஓடி விட்டது. நாங்கள் செய்த இந்த அத்தனை சாதனைகளும் ஓராண்டில் செய்த சாதனைகள்.

மக்களுக்காக திட்டம் தீட்டி அதனை அமல்படுத்தியது, ஆட்சியில் அமர்ந்து அகில இந்திய அரசியலில் சாதித்து காட்டியது என இரு வகை சாதனைகளை முதலமைச்சர் சாதித்து காட்டி உள்ளார். எதிர்கட்சியான அதிமுக, இரண்டு ஆண்டுகள் நாங்கள் ஒன்றும் செய்யவில்லை என சொல்லவில்லை. ஆனால், ஒரே ஒரு நபர் மட்டும் நாங்கள் ஒன்றும் செய்யவில்லை என சொல்கிறார்.

அவர்தான் ரவி. தமிழ்நாட்டின் ஆளுநர். ஆளுநருக்கு இருக்கும் ஒரே வேலை வேலையற்ற வேலை. அதைக்கூட ஒழுங்காக செய்யாதவர், ஆளுநர். அரசின் திட்டங்கள் உள்ளிட்டவைகள் அடங்கிய ஆளுநருக்கான உரையை அவருடைய ஒப்புதல் பெற்ற பின்னரே சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்டது.

ஆனால், அவர் அதில் பல வரிகளை விட்டுவிட்டு படித்தார். இல்லாத பல தகவல்களையும் படித்தார். சபையில் கண்ணியம் காக்க வேண்டும் என்ற அடிப்படையில், அவர் உரை முடியும் வரை எதுவும் சொல்லாமல் இருந்தோம். அவர் உரை முடிந்த பின்னரே முதலமைச்சர் எழுந்து பேசினார். அது பொறுக்காமல் ஆளுநரே வெளியேறினார்.

அரசு எழுதிக் கொடுத்து அனைத்தையும் எப்படி படிக்க முடியும் என ஆளுநர் கேட்கிறார். அது அவரது தலையெழுத்து. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 176இன் படி கட்டாயம் அதனை படித்தே ஆக வேண்டும். ஒரே நாடு ஒரே இந்தியா என்பது ஸ்லோகன் என்றால், திராவிட மாடல் என்பதும் ஸ்லோகன்தான். பெட்டிக்கடைக்கு கூட லாய்க்கில்லாதவர் தமிழ்நாட்டின் ஆளுநர்.

15 மசோதாக்களை ஒப்புதல் வழங்காமல் நிலுவையில் வைத்திருக்கும் ஆளுநர், தன்னிடம் எந்த மசோதாவும் நிலுவையில் இல்லை என்று சொல்கிறார். எங்களையும் மதிக்கவில்லை. அரசியலமைப்புச் சட்டத்தையும் ஆளுநர் மதிக்கவில்லை. எங்களை ஆளுநர் எதிரி போல் பார்க்கிறார்.

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு இடைத்தேர்தலில் போட்டி போட்டு சட்டமன்றத்திற்கு வாருங்கள். இடைத்தேர்தலில் நாங்களே வெற்றி பெறச் செய்து எம்எல்ஏவாக ஆக்குகிறோம். தேவையெனில் சட்டமன்றத்தில் பேசுவோம். இல்லையென்றால் பாஜகவில் சேருங்கள். உங்களை அவர்கள் மந்திரியாக்கி விடுவார்கள். ஆளுநரிடம் நாங்கள் வம்பு செய்ய விரும்பவில்லை.

அவர் யாருக்காக இப்படியெல்லாம் பேசுகிறார் என்பதும் தெரியும். கொள்கைக்காக பாடுபடுகிறோம். இந்த இயக்கத்தை அழித்து விடலாம் என எத்தனை பேர் கங்கணம் கட்டிக் கொண்டிருந்தாலும், அது நடக்காது. இளைஞர்கள் இருக்கும் வரை இந்த கட்சியை அழிக்க முடியாது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:திராவிட சித்தாந்தம் காலாவதியா? ஆளுநரின் பேச்சுக்கு முதலமைச்சர் பதிலடி!

ABOUT THE AUTHOR

...view details