நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்துவந்த காவல்உதவி ஆய்வாளர் முருகன், கரோனாவால் பாதிக்கப்பட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று முன்தினம் (செப்.12) மருத்துவம் பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன், கரையிருப்பு இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் உயிரிழந்த உதவி ஆய்வாளர் முருகன் உருவப்படத்திற்கு மாநகர காவல் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தச்சநல்லூர் காவல் நிலையத்தில் இன்று (செப்.14) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நெல்லை மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோர் கலந்துகொண்டு உயிரிழந்த முருகனின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்தார். அவரைத் தொடர்ந்து மாநகர காவல் துணை ஆணையர் அர்ஜுன் சரவணன், நெல்லை டவுன் உதவி ஆணையர் சதீஷ், தச்சநல்லூர் காவல்நிலைய காவலர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தினார்கள்.
கரோனாவால் உயிரிழந்த உதவி ஆய்வாளரின் உருவப்படத்திற்கு மாநகர காவல் ஆணையர் மலரஞ்சலி பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தீபக் தாமோர், "உதவி ஆய்வாளர் முருகனின் இறப்பு அவரது குடும்பத்தினர், காவல் துறைக்கு மிகப்பெரிய இழப்பாகும். அவரது ஆன்மா சாந்தியடைய அஞ்சலி செலுத்தியுள்ளோம். மேலும் அரசு வழிகாட்டுதல்படி முருகனின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:திருமணமாகி 7 மாதத்தில் புதுப்பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு