தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா ? போலீசார் விசாரணை - river bank in Tirunelveli

திருநெல்வேலி: ஆடைகள் கலைந்த நிலையில், தாமிரபரணி ஆற்றங்கரையில் மீட்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

தாமிரபரணி ஆற்றங்கரையில் மீட்கப் பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட பெண்
தாமிரபரணி ஆற்றங்கரையில் மீட்கப் பட்ட மனநலம் பாதிக்தாமிரபரணி ஆற்றங்கரையில் மீட்கப் பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கப்பட்ட பெண்

By

Published : Sep 10, 2020, 10:12 PM IST

திருநெல்வேலி மாவட்டம் பொட்டல் தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் ஆடைகள் கலைந்த நிலையில் அலங்கோலமாக இருப்பதாக நெல்லையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற சமூக ஆர்வலர்கள் அந்த பெண்ணை மீட்டு தாழையூத்து காவலர்களிடம் ஒப்படைத்தனர். காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அந்த பெண் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே காசியாபுரத்தைச் சேர்ந்த பேச்சியம்மாள்(24) என்பதும், அவர் கடந்த 8ஆம் தேதி வீட்டில் இருந்து மாயமானதும் தெரியவந்துள்ளது. மேலும் பேச்சியம்மாள் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

மனநலம் பாதிக்கப்பட்ட பேச்சியம்மாள் வீடு வாசல் மறந்த நிலையில் ஆற்றங்கரையோரம் தங்கியிருந்தபோது இரவில் மதுபோதையில் அடையாளம் தெரியாத நபர்கள் அவரை பாலியல் வன்கொடுமை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க...போதைப்பொருள் வர்த்தகத்தின் சந்தையான கன்னட சினிமா உலகம் - அதிர்ச்சி தகவல்!

ABOUT THE AUTHOR

...view details