தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மக்கள் வசிக்கும் பகுதியில் மூட்டை மூட்டையாக மருத்துவ கழிவுகள்; நோய் தொற்று பரவும் அபாயம் - மருத்துவ கழிவு

திருநெல்வேலியில் மக்கள் அதிகம் வாழும் பகுதியில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகளை அகற்றப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மக்கள் வசிக்கும் பகுதியில் மூட்டை மூட்டையாக மருத்துவ கழிவுகள்
மக்கள் வசிக்கும் பகுதியில் மூட்டை மூட்டையாக மருத்துவ கழிவுகள்

By

Published : Oct 28, 2022, 10:56 PM IST

திருநெல்வேலி: மாநகராட்சிக்கு உட்பட்ட சாந்தி நகர் பகுதி மக்கள் அதிகமாக வாழக்கூடிய பகுதியாக உள்ளது. சாந்தி நகர் பேருந்து நிலையத்திற்குப் பின்புறம் குடியிருப்புகளுக்கு அருகில் பல்வேறு மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது.

மூட்டை மூட்டையாகக் கொட்டப்பட்டுள்ள அந்த மருத்துவக் கழிவுகளில் பல்வேறு மருந்துகள் மற்றும் ஊசிகள் ஆகியவை கொட்டப்பட்டுள்ளன. மக்கள் அதிகமாக வாழக்கூடிய குடியிருப்புகளுக்கு அருகில் கொட்டப்பட்டுள்ள இந்த மருத்துவ கழிவுகள் துர்நாற்றம் வீச ஆரம்பித்துள்ளதுடன் அதனால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனையடுத்து தகவலறிந்து மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ள இடத்திற்கு வருகை தந்த திருநெல்வேலி மாநகராட்சியின் நகர் நல அலுவலர் ராஜேந்திரன் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

“மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ கழிவுகளைக் கொட்டியவர்கள் யார் என்று விசாரணை செய்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

மக்கள் வசிக்கும் பகுதியில் மூட்டை மூட்டையாக மருத்துவ கழிவுகள்

இதையும் படிங்க:சேலத்தில் திமுக, அதிமுக கவுன்சிலர்களுக்கு இடையே மோதல்!

ABOUT THE AUTHOR

...view details