நெல்லை:நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவ மாணவிகள் 11 பேர் வள்ளியூரை அடுத்த திருக்குறுங்குடி மலைப்பகுதியில் உள்ள நம்பி கோயிலுக்கு சென்றனர். அதன் அருகே உள்ள தடை செய்யப்பட்ட வனப்பகுதியில் உள்ள நீரோடையில் குளித்துள்ளனர்.
இதில் கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் ஜோயல் (22) என்பவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இவரது தந்தை கேரள மாநில காவல்துறையில் ஓர் உயர் பதவியில் அங்கம் வகுப்பதாகக் கூறப்படுகிறது.