திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர் அருகேயுள்ள மணிமூர்த்திஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்இசக்கி. இவர் டீ மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி முத்துலட்சுமி (54). இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கு திருமணமாகிவிட்டது.
இந்நிலையில், முத்துலட்சுமி திருநெல்வேலி வண்ணார்பேட்டையைச் சேர்ந்த ஒரு நபருடன் திருமணத்தை மீறய உறவில் இருப்பது பொன்இசக்கிக்கு தெரியவருகிறது. இதை அவர் அடிக்கடி கண்டித்துள்ளார். இதனால் கணவன்- மனைவிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
மேலும் மற்ற இரண்டு மகளும் உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்ட நிலையில் நேற்று (மே 28) இரவும் இந்த பிரச்னை தொடர்பாக கணவன் – மனைவியிடையே தகராறு ஏற்பட்டு முற்றியுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த பொன்இசக்கி மனைவி முத்துலட்சுமியை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தச்சநல்லூர் காவல்நிலையத்தில் சரண் அடைந்துவிட்டார்.