தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு! - thirunelveli latest news

திருநெல்வேலி: தாமிரபரணி ஆற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தான்.

திருநெல்வேலி
தாமிரபரணி ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி

By

Published : Mar 19, 2021, 8:00 PM IST

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை திம்மராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரனின் மகன் அருண் (17). இவர் இன்று (மார்ச் 19) தனது நண்பர்களுடன் தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த அருண் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டார்.

அதைக் கண்டு அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த, பாளையங்கோட்டை தீயணைப்புத் துறை வீரர்கள், சம்பவ இடத்திற்குச் சென்று, ரப்பர் படகு மூலம் அருணை தேடிவந்தனர்.

அப்போது உயிரிழந்த நிலையில் சிறுவன் அருணின் உடல் கரை ஒதுங்கியுள்ளது. இதைப் பார்த்து, அவனது பெற்றோர் கவலை அடைந்தனர். பின் அருணின் சடலத்தை மீட்ட பாளையங்கோட்டை காவல் துறையினர், இது குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: இஸ்லாமிய பெண்கள் அமைப்பு செயலாளர் கொலை: மூவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details