நெல்லை: மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை அடிப்பேன் என்று கூறிய ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானே, முன்னதாக மகராஷ்டிர காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தொடர்ந்து நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. இச்சம்பவம் தேசிய அளவில் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன் இல்லத் திருமண விழாவில் பங்கேற்பதற்காக மகாராஷ்டிரா கல்வி அமைச்சர் வர்ஷா கெயிக்வாட் நேற்று (ஆகஸ்ட் 28) நெல்லை வந்திருந்தார். அப்போது நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மரியாதைக் குறைவாக பேசியது ஏற்கதக்கதல்ல...
பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், ”மகாராஷ்டிர முதலமைச்சர் குறித்து ஒன்றிய அமைச்சர் மரியாதைக் குறைவாக பேசியது ஏற்கத்தக்கதல்ல. பெரிய பதவிகளில் இருப்பவர்களை மரியாதைக் குறைவாக பேசுவது நமது பண்பாடு அல்ல. கருத்து சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக எதையும் பேசக் கூடாது.
மகாராஷ்டிராவின் சட்டங்கள் தனித்துவமானது. இது தொடர்பாக காவல்துறை விசாரணை செய்து வருகிறது. மகாரஷ்டிராவில் கரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் கிராமப் பகுதிகளில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா கல்வி அமைச்சர் வர்ஷா கெயிக்வாட் கிராமப் பகுதிகளில 22 மாணவர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நகர்ப்புறங்களில் பள்ளிகளைத் திறப்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார். இதையும் படிங்க : இளைஞரிடம் ரூ.10 லட்சம் பறித்த வழக்கு: பெண் காவல் ஆய்வாளர் சிறையில் அடைப்பு