தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

#TNPL: மதுரைக்கு 183 ரன்கள் இலக்கு!

திருநெல்வேலி: டிஎன்பிஎல் தொடரில் நடைபெற்றுவரும் மதுரை பேந்தர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 183 ரன்களை குவித்துள்ளது.

Madurai Panthers set target of 183 runs

By

Published : Jul 22, 2019, 9:29 PM IST

டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 5ஆவது லீக் போட்டியில் மதுரை பேந்தர்ஸ் அணியும் திண்டுக்கல் டிரகன்ஸ் அணியும் மோதிவருகின்றன. இதில், டாஸ் வென்ற மதுரை அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

பந்தை பவுண்டரிக்கு அனுப்பும் நிஷாந்த்

அதைத்தொடர்ந்து, களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் நிஷாந்த், ஜெகதீசன் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். இருவரும் அரைசதத்தை முதல் விக்கெட்டிற்க்கு 104 ரன்களைச் சேர்த்த நிலையில் நிஷாந்த் 57 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பந்தை சிக்ஸருக்கு அடித்த ஜெகதீசன்

அதைத்தொடர்ந்து சிறாப்பாக ஆடிய ஜெகதீசன் 51 பந்துகளில் 87 ரன்களை விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் திண்டுகல் டிராகன்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்களை எடுத்தது. மதுரை பேந்தர்ஸ் அணி சார்பில் ராஹில் ஷா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதன் பின் 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை பேந்தர்ஸ் அணி தற்போது பேட்டிங் செய்துவருகிறது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details