மலேசியாவில் வசித்து வரும் திருநெல்வேலி மாவட்டம் சங்கர்நகர் பகுதியை தனது பூர்வீகமாக கொண்ட செல்வபிரகாஷ் என்பவர் திருநெல்வேலி தொகுதிக்கு சுயேட்சையாக போட்டியிடுவதற்காக அவரின் வேட்பு மனுவை தேர்தல் அலுவலரும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருமான ஷில்பா பிரபாகர் சதீஷிடம்டெபாசிட் பணமாக 25 ஆயிரம் கட்டி வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
மக்களவை தேர்தல்: வெளிநாடு வாழ் இந்தியர் நெல்லை தொகுதிக்கு மனுத்தாக்கல்! - மக்களவை தேர்தல்
திருநெல்வேலி: மக்களவை தேர்தலில் திருநெல்வேலி தொகுதிக்கு சுயேட்சையாக போட்டியிட வெளிநாட்டு இந்தியர் ஒருவர் மனுதாக்கல் செய்துள்ளார்.
சுயேட்சை வேட்பாளர் செல்வபிரகாஸ்ரஷ்
கடந்த 19 ம் தேதி வேட்பு மனு தாக்கல் துவங்கிய நிலையில் இதுவரை திருநெல்வேலி தொகுதிக்கு சுயேட்சை வேட்பாளர்களாக செல்வபிரகாஷும், ராகவனும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். தென்காசி தொகுதிக்கு இதுவரை யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.