தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரேஷன் கடை அமைத்துத்தரவில்லை - உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணித்த நெல்லை மாவட்ட கிராம மக்கள் - திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ரேஷன் கடை அமைத்து தரக்கோரி விடுத்த கோரிக்கை நிறைவேற்றப்படாததால், மாதுடையார் குளம் பகுதியில் வாக்காளர்கள் தேர்தலைப் புறக்கணித்தனர்.

உள்ளாட்சித் தேர்தல் புறக்கணிப்பு
உள்ளாட்சித் தேர்தல் புறக்கணிப்பு

By

Published : Oct 6, 2021, 5:17 PM IST

திருநெல்வேலி: மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, மானூர், பாளையங்கோட்டை, பாப்பாக்குடி ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கு இன்று (அக். 6) முதல் கட்டத் தேர்தல் நடைபெற்று வருகிறது.

இதையொட்டி காலை 7 மணிமுதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகிறார்கள். இந்நிலையில் சேரன்மகாதேவி அருகில் மாதுடையார்குளம் பகுதியில் வாக்காளர்கள் தேர்தலைப் புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

உள்ளாட்சித் தேர்தல் புறக்கணிப்பு

உள்ளாட்சித் தேர்தல் புறக்கணிப்பு

அதாவது ரேஷன் கடை அமைத்து தரக்கோரி, விடுத்த கோரிக்கை நிறைவேற்றப்படாததால் வாக்காளர்கள் தேர்தலைப் புறக்கணித்தனர்.

அங்கு அலுவலர்கள் வாக்காளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியில் 460 வாக்குகள் உள்ள நிலையில், இதுவரை ஒரு வாக்கு மட்டுமே பதிவாகி இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:வாக்களிக்க அனுமதி மறுப்பு - பெண் வாக்காளரின் மாமனார் வாக்குவாதம்

ABOUT THE AUTHOR

...view details