தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லையில் உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல் பணி மும்முரம் - திருநெல்வேலி அண்மைச் செய்திகள்

வருகின்ற 22ஆம் தேதியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைவதை அடுத்து, அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்குப் படையெடுத்துவருகின்றனர்.

ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் குவிந்த வேட்பாளர், ஆதரவாளர்கள் தொடர்பான காணொலி
ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் குவிந்த வேட்பாளர், ஆதரவாளர்கள் தொடர்பான காணொலி

By

Published : Sep 21, 2021, 6:36 AM IST

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இரண்டாயிரத்து 69 பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல், வருகின்ற அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதனையடுத்து கடந்த 15ஆம் தேதிமுதல் வேட்புமனுக்கள் பெறப்பட்டுவருகின்றன.

வருகின்ற 22ஆம் தேதி வரை வேட்புமனுக்கள் பெறப்படும் எனவும் முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் மூன்று நாள்களில், பெரிய அளவில் வேட்பாளர்கள் மனு தாக்கல்செய்ய ஆர்வம் காட்டவில்லை.

ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் குவிந்த வேட்பாளர், ஆதரவாளர்கள் தொடர்பான காணொலி

கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வேட்பாளர்கள்

இதற்கிடையில் வேட்புமனு தாக்கல்செய்ய இன்னும் இரண்டு நாள்களே உள்ளதால், நேற்று (செப். 20) ஊராட்சி ஒன்றியங்களில் காலை முதலே வேட்பாளர்கள் கூட்டம் கூட்டமாக மனு தாக்கல்செய்ய வந்தனர். குறிப்பாக பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய வேட்பாளர்கள் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களுடன் மனு தாக்கல் செய்ய குவிந்தனர்.

இதில் பலரும் மனு தாக்கல் செய்தவுடனேயே, வேட்பாளர்களுக்கு மாலை அணிவித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இன்றும் (செப். 21), நாளையும் திமுக, அதிமுக, காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட முக்கியக் கட்சி வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

இதனால் நெல்லை மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தொடர்ந்து தேர்தலையடுத்து கிராமப்புறங்களில் உள்ள வீடுகளின் மதில் சுவர்களில், கட்சி சின்னங்களை வரையும் வேலையும் தொடங்கியுள்ளது.

இதையும் படிங்க:ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details