நெல்லை மாவட்டத்தில் கரோனா தாக்கம் தற்போது அதிகரித்துவருகிறது. மாவட்டத்தில் நேற்று (ஏப். 9) 79 பேருக்கும் இன்று 115 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்மூலம் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 623 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதனடிப்படையில் நெல்லை மாநகர காவல் துறையினர் நெல்லை, கொக்கிர குளத்தில் முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வருபவர்களிடம் 200 ரூபாய் அபராதம் விதித்துவருகின்றனர்.
மேலும் போக்குவரத்து காவல் பெண் ஆய்வாளர் மகேஸ்வரி அங்கு வரும் பேருந்துகளில் ஏறி பொதுமக்களிடம் கரோனாவால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும், அதை நாம் எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்தும் எடுத்துரைத்தார்.