திருநெல்வேலி: மேலப்பாளையம் நடராஜபுரத்தைச் சேர்ந்த பாலேஸ்வரி, முத்துமாரி மற்றும் 60 வயது மூதாட்டி வள்ளியம்மாள் ஆகிய மூன்று பேர் கருங்குளம் பகுதியில் வயல் நடவு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் வயலில் பணியில் இருந்த மூவரும் அருகில் ஒதுங்கியதாக தெரிகிறது.
திடீரென இடி, மின்னல் தாக்கியதில் பாலேஸ்வரி, முத்துமாரி ஆகிய இருவரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மூதாட்டி வள்ளியம்மாள் படுகாயமடைந்தார்.