திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு கரோனோ தொற்று வேகமாகப் பரவிவருகிறது. குறிப்பாக, சென்னை மற்றும் மும்பை ஆகிய ஊர்களிலிருந்து வரும் நபர்களில் பலருக்குத் தொற்று உறுதியாவதால் நெல்லையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே செல்கிறது. இன்று மாலை நிலவரப்படி மாவட்டத்தில் 507 பேர் கரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 289 பேர் வெளியூரிலிருந்து வந்தவர்களாவர்.
வெளியூர்களிலிருந்து வருபவர்களைக் கண்காணிக்க மாநகர எல்லைகளில் ஏழு சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் பலர் இ-பாஸ் இல்லாமல், காவல் துறையினரின் கண்ணில் சிக்காமல் சொந்த ஊர்களுக்குப் படை எடுத்து வருவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்துவருகிறது. எனவே இதுபோன்ற நபர்களை மருத்துவக் கண்காணிப்பு செய்வதில் அலுவலர்களுக்கு பெரும் சவால் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து நெல்லைக்கு முறையான அனுமதியில்லாமல் வரும் நபர்கள் குறித்து 1077 என்ற உதவி எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்று நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் சரவணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஈடிவி பாரத்துக்கு அவர் அளித்த பேட்டியில், ”நெல்லை மாவட்டத்தில் கரோனோவைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.