தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு விழாவில் பெண் தற்கொலை முயற்சி.. கந்துவட்டி கொடுமையா காரணம்? - திருநெல்வேலி செய்திகள்

Suicide Attempt for usury issue: கந்துவட்டி கொடுமையால் பெண் ஒருவர் சபாநாயகர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கண்ணெதிரே தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் நெல்லையில் பரபரப்பு நிலவியது.

Suicide Attempt for usury issue
கந்துவட்டி கொடுமையால் பெண் தற்கொலை முயற்சி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 4, 2023, 2:24 PM IST

நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் பெண் தற்கொலை முயற்சி

திருநெல்வேலி:நெல்லையில் பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் மாவட்ட வேளாண் பொறியியல் துறை சார்பில் விவசாயிகளுக்கு மானிய விலையில், பவர் டில்லர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் சபாநாயகர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பவர் டில்லர் வாகனங்களை வழங்கிவிட்டு, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென சபாநாயகர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கண்ணெதிரே மைதானத்தில் பெண் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பு நிலவியது. இதை கவனித்த அலுவலர்கள் மற்றும் போலீசார் உடனடியாக ஓடிச் சென்று அந்த பெண்ணை தடுத்து தற்கொலையில் இருந்து மீட்டனர். பின்னர் ஆட்டோவில் அப்பெண் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மேலும் இதுகுறித்த விசாரணையில், அவர் பாளையங்கோட்டை எம்கேபி நகரை சேர்ந்த வேளாங்கண்ணி என்பதும், கந்துவட்டிக் கொடுமை காரணமாக அவர் தற்கொலைக்கு முயற்சி செய்ததும் போலீசாரிடம் புகார் தெரிவித்து உள்ளார். அந்த புகாரில் "எம்கேபி நகரை சேர்ந்த கிளாடிஸ் என்பவரிடம் வேளாங்கண்ணி குடும்ப தேவைக்காக ரூ.10 ஆயிரம் கடனாக கேட்டதாகவும் அதற்கு கிளாடிஸ் ரூ.8 ஆயிரம் கொடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் அதற்கு வாரந்தோறும் ஆயிரத்து 100 ரூபாய் என 10 வாரங்கள் மொத்தம் 11 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என கிளாடிஸ் கூறியதாக சொல்லப்படுகிறது. அதன் பெயரில் ஏழு தவணைகளாக ஆயிரத்து 100 ரூபாய் பணத்தை வேளாங்கண்ணி கொடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து மீதமுள்ள 3 தவணைகளைக் கொடுக்க முடியாமல் திணறியதாக கூறப்படுகிறது.

எனவே கிளாடிஸ் மற்றும் அவரது உறவினர் சுரேஸ் ஆகிய இருவரும் பாளையங்கோட்டை மார்க்கெட்டில் உள்ள வேளாங்கண்ணியின் கடைக்கு சென்று கடனை தராவிட்டால் கடை நடத்த முடியாது என்றும் உன் குழந்தைகளை ஒழுங்காக வாழ விடமாட்டேன் என்றும் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக வேளாங்கண்ணி முதலமைச்சர் தனிப்பிரிவு மற்றும் தென்மண்டல ஐஜிக்கு அளித்த புகாரை தொடர்ந்து பாளையங்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் கிளாடிஸ் மற்றும் சுரேஸின் நெருங்கிய நண்பர்களான பாளையங்கோட்டை தெற்கு பஜாரை சேர்ந்த காளிதாஸ், ஹேலினாவிடம், கணவரின் மருத்துவ செலவுக்காக ரூ.10 ஆயிரம் வேளாங்கண்ணி கடன் பெற்றதாக சொல்லப்படுகிறது.

அதற்காக 15 தினங்களுக்கு ஒரு முறை ஆயிரம் ரூபாய் என வட்டியாக செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த கடனுக்காக வேளாங்கண்ணி, ஹேலினாவிடம் தனது வங்கி காசோலைகளை கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் கிளாடிஸ் மற்றும் சுரேஸ் ஆகியோர் வேளாங்கண்ணியின் காசோலைகளை ஹேலினாவிடமிருந்து பெற்று, வங்கியில் பணம் கேட்டு விண்ணப்பித்ததாக கூறப்படுகிறது.

இதை அறிந்த வேளாங்கண்ணி ஹேலினாவிடம் தனது காசோலைகளை திருப்பித் தரும்படி கேட்டுள்ளார். ஆனால் தற்போது வரை காசோலைகளை திருப்பிக் கொடுக்காமல், ஹேலினா மற்றும் கிளாடிஸ் ஆகிய இருவரும் வேளாங்கண்ணியிடம் கந்து வட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக சொல்லப்படுகிறது.

எனவே மனமுடைந்த வேளாங்கண்ணி தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு தள்ளப்பட்டதாக போலீசாருக்கு வழங்கிய புகார் மனுவில் தெரிவித்து உள்ளார். அரசு நிகழ்ச்சியில் சபாநாயகர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கண்ணெதிரே கந்துவட்டி கொடுமை காரணமாக பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நெல்லையில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலையை தவிர்க்கவும்!

இதையும் படிங்க:Palladam family murder: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வெட்டிக்கொலை... முன்விரோதம் காரணமா? பின்னணி என்ன?

ABOUT THE AUTHOR

...view details