திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தி திறன்கொண்ட இரண்டு அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இரண்டாவது அணு உலையின் ஜெனரேட்டரில் கடந்த 21ஆம் தேதி ஏற்பட்ட பழுதின் காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனை சரிசெய்யும் பணியில் இந்திய–ரஷ்ய விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். மேலும் ஆறு ரஷ்ய விஞ்ஞானிகள் ரஷ்யாவிலிருந்து சிறப்பு விமானம் மூலம் வரவழைக்கப்பட்டு அவர்களும் பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். கடந்த ஐந்து நாள்களாக பழுது நீக்கும் பணிகள் நடந்து வந்த நிலையில் இன்று காலை முழுவதுமாக பழுது சரிசெய்யப்பட்டு காலை 9.50 மணியளவில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது.
கூடங்குளம் அணு உலையில் பழுது நீக்கம்: உற்பத்தி தொடக்கம் - கூடங்குளத்தில் பழுது நீக்கப்பட்டு மின்சார உற்பத்தி தொடங்கியது
திருநெல்வேலி: கூடங்குளத்தில் இரண்டாவது அணு உலையில் பழுது நீக்கப்பட்டு மின் உற்பத்தியை தொடங்கியது. தற்போது 400 மெகாவாட் வரை மின்சார உற்பத்தி நடந்து வருகிறது. இது படிப்படியாக அதிகரிக்கப்படும் என அணுமின் நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Kudankulam second nuclear reactor repaired
தற்போது 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இது படிப்படியாக அதிகரிக்கப்படும் என அணுமின் நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து முதலாவது அணு உலையில் 420 மெகாவாட் மின் உற்பத்தி நடந்து வருகிறது.
இதையும் படிங்க... கூடங்குளம் அணு உலை - ரஷ்யாவிலிருந்து குழு வருகை