தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வருடாந்திரப் பராமரிப்புப் பணி: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம் - Kudankulam Nuclear Power Station

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வருடாந்திரப் பராமரிப்புப் பணி காரணமாக, மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

kudankulam plant first phase shutdown
kudankulam plant first phase shutdown

By

Published : Jun 22, 2021, 10:18 AM IST

திருநெல்வேலி:கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலையில், வருடாந்திரப் பராமரிப்புப் பணிக்காக இன்றுமுதல் (ஜூன் 22) மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

465 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

இந்தப் பராமரிப்புப் பணியானது 45 முதல் 60 நாள்கள் வரை நடைபெறவுள்ளது. இதில், முதல் அணு உலையில் உள்ள எரிபொருள்கள் மாற்றப்பட்டு, அதன் பின்னர் மீண்டும் அணு உலை செயல்படும் என அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலையிலிருந்து தமிழ்நாட்டிற்கு கிடைக்கக்கூடிய 465 மெகாவாட் மின்சாரம் பாதிப்படைந்துள்ளது.

இதையும் படிங்க: அரசியல் ஆடுபுலி ஆட்டம்: தேசியளவில் எதிர்க்கட்சிகளை அணி திரட்டும் சரத் பவார்!

ABOUT THE AUTHOR

...view details