தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அணுஉலை பணிக்காக கடலுக்குள் சென்ற படகு விபத்து - பஞ்சாப் தொழிலாளி உயிரிழப்பு - கூடங்குளம் அணுமின் நிலையம்

திருநெல்வேலி: கூடன்குளம் அணுஉலை பணிக்காக கடலுக்குள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒப்பந்த தொழிலாளி உயிரிழந்தார்.

பலியான தொழிலாளி
பலியான தொழிலாளி

By

Published : Jul 28, 2020, 1:47 PM IST

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 3 - 4ஆவது அணு உலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக கடலுக்குள் குழாய் அமைக்கும் பணிக்கு மதிப்பீடு செய்வதற்காக, தனியார் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 10 பேர் இன்று (ஜூலை 28) படகில் கடலுக்குள் சென்றுள்ளனர்.

அப்போது, கடலில் படகு எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தில் பஞ்சாப் மாநிலம் மான்சா மாவட்டத்தைச் சேர்ந்த பவான் சர்மா மகன் தருண் சர்மா (23) என்பவர் படகுக்கு அடியில் சிக்கி உயிரிழந்தார்.

மற்றவர்கள் பாதுகாப்புடன் மீட்கப்பட்டனர். இதுகுறித்து கூடங்குளம் கடலோர பாதுகாப்பு குழும காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, உயிரிழந்த தருண் சர்மாவின் சடலத்தை உடற்கூறாய்விற்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details