தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கூடங்குளம் - அணுக்கழிவுகளை சேமிக்க எதிர்ப்புத் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்!

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை சேமித்து வைக்கும் முயற்சியைக் கண்டித்து ஊராட்சி மன்ற கூட்டத்தில் எதிர்ப்புத் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

koodankulam-nuclear-power-station-issue
koodankulam-nuclear-power-station-issue

By

Published : Mar 11, 2022, 5:29 PM IST

நெல்லை :கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தற்போது தலா 1000 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் இயங்கி வரும் நிலையில் கூடுதலாக நான்கு உலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், அணுக் கழிவுகளை கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் சேமித்து வைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஆனால், அணுக்கழிவுகளை உள்ளேயே சேமிப்பதன் மூலம் அப்பகுதி மக்களுக்கு ஆரோக்கியம் பாதிக்கும் என்பதால், இதற்கு எதிர்ப்புத்தெரிவித்து கூடங்குளம் ஊராட்சி கூட்டத்தில் அனைத்து ஊராட்சி மன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தீர்மானம் நிறைவேற்றம்

இதுதொடர்பாக கூடன்குளம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவரும் கூட்டாக மனு அளித்திருந்தனர். அதனடிப்படையில், கூடங்குளம் ஊராட்சியில் நடைபெற்ற மூன்றாவது கூட்டத்தில் அதன் தலைவர் வின்சி மணியரசு தலைமையில் அனைத்து மன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ஆசிரியர் கலந்தாய்வில் விதிமீறல்; 4 பேர் பணியிடை நீக்கம்

ABOUT THE AUTHOR

...view details