நெல்லையில் கடந்த 23ஆம் தேதியன்று முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கரன், வீட்டு பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் இதுவரை இந்த வழக்கு தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.
முன்னாள் மேயர் படத்திற்கு கனிமொழி மரியாதை இந்நிலையில், இவர்களின் படத்திற்கு திமுக எம்.பி கனிமொழி மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், உமா மகேஸ்வரியின் குடும்பத்தினர், பணிப்பெண் மாரியம்மாளின் மகள் ஆகியோருக்கு கனிமொழி ஆறுதல் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அனைவரிடமும் இனிமையாகப் பழகக்கூடிய குணம் படைத்த உமா மகேஸ்வரியின் இந்த கொலை சம்பவம் தனக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும், கொலை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.