தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லையில் ஜூலை 11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - July 11th is a local holiday

நெல்லையப்பர் கோயில் ஆனித்தேரோட்டத்தை முன்னிட்டு ஜூலை 11ஆம் தேதி நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

நெல்லையில் ஜூலை 11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை
நெல்லையில் ஜூலை 11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

By

Published : Jun 25, 2022, 11:13 AM IST

நெல்லை: நெல்லையப்பர் கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவின் முக்கிய அம்சமாக வரும் ஜூலை 11ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. ஆனித் தேரோட்டத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு ஜூலை 11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், நெல்லையப்பர் கோவில் தேர் திருவிழா ஜூலை 11ஆம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு அன்று மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட நாளில் அரசு பொதுத்தேர்வுகள் ஏதும் இருப்பின் பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள் பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது.

மேலும் உள்ளூர் விடுமுறை நாளன்று நடத்தப்படும் அரசு பொதுத்தேர்வுகள் அனைத்தும் எந்தவித மாறுதலும் இன்றி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: TNPL 2022: முதல் போட்டியிலேயே சூப்பர் ஓவர் - நெல்லை அணி 'த்ரில்' வெற்றி

ABOUT THE AUTHOR

...view details