தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பல் பிடுங்கிய விவகாரத்தில் தடயங்கள் அழிக்கப்படுகிறது - வழக்கறிஞர் பரபரப்பு குற்றச்சாட்டு - Triunelveli Custodial Torture

Ambasamudram Custodial Torture issue:நெல்லையில் முன்னாள் ஏஎஸ்பி பல்வீர் சிங் விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில், தடயங்களை அழிப்பதற்காகவே இந்த விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுவதாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் மகாராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Apr 19, 2023, 9:31 PM IST

Updated : Apr 19, 2023, 10:02 PM IST

வழக்கறிஞர் பரபரப்பு குற்றச்சாட்டு

Ambasamudram Custodial Torture issue: நெல்லை:அம்பாசமுத்திரத்தில் கைதிகளின் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் காவல் நிலையங்களில் உள்ள தடயங்களை அழிப்பதற்காகவே இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுவதாக என நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்த விசாரணைக்குப் பின் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் மகாராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

அம்பாசமுத்திரம் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட அருண்குமார் மற்றும் சந்தோஷ் ஆகியோர் அளித்த புகாரின் பேரில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணையை சென்னையில் நாளை தொடங்குகிறது. அம்பாசமுத்திரத்தில் விசாரணை கைதிகளின் பற்களை முன்னாள் ஏஎஸ்பி பல்வீர் சிங் பிடுங்கியது தொடர்பான விசாரணையில் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் பாதிக்கப்பட்ட நபர்களான அருண் குமார், சந்தோஷ் உள்ளிட்டோர் ஆஜராக உள்ளனர்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதிகளில் பல் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் புகார் தாரரான சுபாஷ் நேரில் ஆஜராகி, தனது தரப்பு வாக்குமூலத்தைப் பதிவு செய்தார். நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜரான சுபாஷ் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோர் விசாரணை அதிகாரியான டிஎஸ்பி பொன் ரகு முன்பு ஆஜரானார்கள்.

தொடர்ந்து சுபாஷ் மற்றும் அவரது வழக்கறிஞர் மகாராஜன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள் டிஎஸ்பி முன்பு நடந்த விசாரணை திருப்திகரமாக இருந்ததாக தெரிவித்தனர்.

மேலும் பேசிய சுபாஷின் வழக்கறிஞர், ''இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட அடைய கருங்குளம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் மற்றும் சந்தோஷ் ஆகியோர் அளித்த புகாரின் அடிப்படையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நாளை சென்னையில் விசாரணை நடத்துகிறது. ஆணையத்தின் முன்பு பாதிக்கப்பட்ட நபர்களான அருண், சந்தோஷ் ஆகியோர் ஆஜராக உள்ளனர்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார். முதல் தகவல் அறிக்கையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏஎஸ்பி பல்வீர் சிங் மற்றும் பலர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஈடுபட்ட மற்ற காவல் துறையினரையும் குற்றம்சாட்டப்பட்டவராக சேர்க்க வேண்டும். முதல் தகவல் அறிக்கையில் கொலை முயற்சி என்ற பிரிவையும் கட்டாயம் சேர்த்திருக்க வேண்டும். அம்பாசமுத்திரம், வி.கே.புரம் போன்ற காவல் நிலையங்களிலும் இதே போன்ற சம்பவங்கள் நடைபெற்று உள்ளது. அங்கு பாதிக்கப்பட்டவர்களும் புகார்கள் அளித்துள்ள நிலையில், அவற்றின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

இந்த விவகாரத்தில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்ததுடன் அவர்களுக்கான மருத்துவச் சான்றிதழ்கள் ஆகியவையும் சாட்சியங்களாக சேர்த்துக்கொள்ள வேண்டும். அம்பாசமுத்திரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் உள்ள ரத்தக் கறைகளை தடயவியல் நிபுணர்கள் மூலம் சேகரித்து அதன் அறிக்கைகளையும் சாட்சியாக எடுத்துக்கொள்ள வேண்டும். சார் ஆட்சியர் விசாரணையைத் தொடங்கிய நாளிலேயே சம்பவம் நடைபெற்ற அனைத்து காவல் நிலையங்களையும் கட்டுப்பாட்டில் எடுத்திருக்க வேண்டும்'' என்றார்.

ஆனால், அவ்வாறு எந்த நடைமுறையும் பின்பற்றப்படவில்லை எனத் தெரிவித்த அவர், காவல் நிலையங்களில் உள்ள தடயங்களை அழிப்பதற்காகவே ஆணையங்கள் அமைக்கப்பட்டிருக்கும் என சந்தேகம் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய அரசு மருத்துவர், நீதித்துறை நடுவர் போன்றவர்கள் சரிவர செயல்படவில்லை எனவும்; அவர்கள் மீதும் நிர்வாக ரீதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க:பல் பிடுங்கிய விவகாரம்: பல்வீர் சிங் மீது மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு!

Last Updated : Apr 19, 2023, 10:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details