நெல்லை: மண்டல மின்வாரிய தலைமைப் பொறியாளர் செல்வகுமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தேரோட்டத்தின் போது தேரோடும் வீதிகளில் மின்சாரத்தினை நிறுத்திடவும், தேரோட்டத்திற்கு இடையூறாக உள்ள மின்கம்பிகளை அகற்றி பாதுகாப்பாக தேரோட்டம் நடைபெறுவதை உறுதி செய்யவும் தேரோட்டம் நடைபெறும் தினத்திற்கு, 15 நாட்களுக்கு முன்னதாகவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்தை அணுகி உரிய முன்னேற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும்
தேர் அமைக்கும்போது உலோகத்தினால் ஆன பாகங்களுக்கு பதிலாக மரக்கட்டைகள் கொண்டு அமைப்பது பாதுகாப்பானதாக இருக்கும். தேரோட்டத்தின் போது சம்பந்தப்பட்ட தேர் அல்லது சப்பரத்தில் ஜெனரேட்டர் மூலம் அலங்கார விளக்குகள் அமைத்தால் அதற்கு தகுந்த மின் கசிவு தடுப்பு சுருவி (RCCB- Residual Current Circuit Breaker) பொருத்தி அலங்கார விளக்குகளுக்கு இணைப்பு கொடுக்க வேண்டும். மின்சாரத்தினால் தீ ஏற்பட்டால் முதலில் மின்சாரத்தை நிறுத்த வேண்டும். மேலும் மின்சாரத்தினால் ஏற்படும் தீயை தண்ணீர் கொண்டு அணைக்ககூடாது முன்னேற்பாடு பாதுகாப்பு செய்துகொள்ள வேண்டும்.