தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனிநபர் வளர்த்துவந்த சந்தன மரங்கள் வெட்டி கடத்தல் - தனிநபர் வளர்த்து வந்த சந்தன மரம்

திருநெல்வேலி: பாபநாசம் அருகே தனிநபர் வளர்த்துவந்த சந்தன மரங்களை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டி கடத்தி உள்ளனர்.

சந்தன மரம்
சந்தன மரம்

By

Published : Oct 30, 2020, 11:04 PM IST

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் சித்தர்கள் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஷ். அதே பகுதியில் இவர் தனக்குச் சொந்தமான தோட்டத்தில் ஏராளமான சந்தன மரங்களை வளர்த்துவந்துள்ளார்.

இந்த நிலையில், இரவு நேரத்தில் இவரது தோட்டத்துக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் நான்கு சந்தன மரங்களை அடியோடு வெட்டி கட்டைகளைக் கடத்திச் சென்றுள்ளனர்.

இது குறித்து அறிந்த சுபாஷ் சந்திரபோஷ் விக்ரமசிங்கபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சந்தன மரக்கட்டைகளைக் கடத்திய நபர்களைத் தேடிவருகின்றனர். கடத்தப்பட்ட சந்தனக் கட்டைகள் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ளவை எனக் கூறப்படுகிறது.

அதேசமயம் வனத் துறையிடம் உரிய அனுமதி பெற்றுதான் சுபாஷ் சந்திரபோஷ் சந்தன மரங்களை வளர்த்துவருகிறாரா என வனத் துறை அலுவலர்களும் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details