தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லையில் கரோனா புதிய உச்சம்: ஒரேநாளில் 452 பேர் பாதிப்பு - Tirunelveli Coronna update

திருநெல்வேலி: மாவட்டத்தில் ஒரேநாளில் 452 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

நெல்லை கரோனா
நெல்லையில் ஒரே நாளில் 452 பேர் கரோனாவால் பாதிப்பு

By

Published : Apr 21, 2021, 12:05 PM IST

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 452 பேருக்குகரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதில், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 164 பேருக்கும், மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 132 பேருக்கும், காவல்கிணற்றில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் 99 பேருக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதுவரை 2,381 பேர் வீடு, மருத்துவமனைகளில் மருத்துவம் பெற்றுவருகின்றனர். இதுவரை நெல்லை மாவட்டத்தில் 20 ஆயிரத்து 333 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இதுவரை 225 பேர் நெல்லை மாவட்டத்தில் கரோனா தொற்றால் இறந்துள்ளனர். நெல்லையில் கடந்த சில நாள்களாகவே தொற்று வேகமாகப் பரவிவரும் சூழலில் புதிய உச்சமாக ஒரே நாளில் 452 பேர் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'டெல்லியில் 8 மணிநேரத்திற்கு மட்டுமே ஆக்சிஜன் உள்ளது!'

ABOUT THE AUTHOR

...view details