தமிழ்நாடு

tamil nadu

'எத்தனை மோடிகள், அண்ணாமலைகள் வந்தாலும் அவர்களின் திட்டத்தை திமுக தவிடு பொடியாக்கும்' - ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்

By

Published : Jul 4, 2023, 11:54 AM IST

கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நெல்லையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி 100 மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி மற்றும் கருணாநிதியின் சிலை போன்றவற்றை வழங்கி கௌரவித்தார்.

கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி
கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி

கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி

திருநெல்வேலி: மாநகர திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நெல்லை டவுன் லட்சுமி மஹாலில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் ஏற்பாட்டில் நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளர் டிபிஎம் மைதீன் கான் தலைமையில் நடைபெற்றது.

இதில் திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டு 100 மூத்த நிர்வாகிகளுக்கு ரூபாய் 5 ஆயிரம் பொற்கிழி மற்றும் கருணாநிதியின் சிலை போன்றவற்றை வழங்கி கௌரவித்தனர். இதனைத்தொடர்ந்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ''கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஓராண்டு கொண்டாட தமிழக முதலமைச்சர் அறிவுறுத்தல் வழங்கி இருந்தார். அதன்படி நெல்லை மாநகர திமுக சார்பில் திமுகவின் மூத்த முன்னோடிகள் 100 பேருக்கு பொற்கிழியும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையும் வழங்கப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பொற்கிழி வழங்கும் நிகழ்வு தொடங்கும். அரசியல் பூகம்பங்கள் வந்தாலும், எத்தனை மோடிகள் வந்தாலும் எத்தனை அண்ணாமலை வந்தாலும் அவர்களது திட்டங்களை தவிடு பொடியாக்கும் தொண்டர்கள் திமுகவில் உள்ளனர்.

மராட்டிய மாநிலத்தில் நடக்கும் சம்பவத்தைப் பார்க்கும் போது பாட்னா எதிர்க்கட்சி கூட்டத்தைக் கண்டு மோடி பயந்துவிட்டார் என்பது தெரிகிறது. மகாராஷ்டிராவில் கேவலமான அரசியல் விளையாட்டை பாஜக விளையாடி வருகிறது. மோடியின் கவுன்ட் டவுன் ஸ்டார்ட் ஆகிவிட்டது. மராட்டிய மாநிலம் சிவாஜி பிறந்த மண். கர்நாடகத்தில் பாஜக தோல்வியைத் தழுவியது போல் மராட்டிய மாநிலத்திலும் 2024-ல் மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்கும்'' என்று கூறினார்.

அஜித் பவார் போன்றோர் தமிழகத்தில் உள்ளனர் என அண்ணாமலை பேசியது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு, ''அண்ணாமலை எல்லாம் ஒரு பொருட்டே கிடையாது. அவரைப் பற்றி கேள்வி எழுப்பாதீர்கள். அண்ணாமலைக்கு தமிழக அரசியல் பற்றி என்ன தெரியும்?, நாகர்கோவிலில் நடந்த கூட்டத்தில் காமராஜர் குறித்தும் அண்ணாமலை பேசி உள்ளார். குடியாத்தம் தேர்தல் முதல் காமராஜர் அடக்கம் வரை திமுக அனைத்து உதவிகளையும் காமராஜருக்கு செய்து உள்ளது'' என்று கூறினார்.

தமிழக ஆளுநர் தொடர்ந்து சனாதனம் குறித்து பேசி வருகிறார் என்ற கேள்விக்கு, ''தமிழகம் பெரியார் பிறந்த மண், அண்ணாவால் வளர்ந்த மண், கருணாநிதியால் பாதுகாக்கப்பட்ட மண். இங்கு சனாதனத்திற்கு கடுகளவும் இடம் கிடையாது'' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:திமுக கூட்டத்தில் ‘பாரத் மாதா கி ஜெய்’ கோஷம் ; காரில் சென்றவர்களுக்கு அடி உதை!

ABOUT THE AUTHOR

...view details