கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. அதனடிப்படையில் திரையரங்குகள், வணிக வளாகங்கள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மக்களின் அத்தியாவசிய தேவைகளில் தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம், பால், காய்கறிகள், இறைச்சி ஆகியவை கிடைக்கவும் வழிவகை செய்யப்பட்டுவருகிறது.
அந்தவகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்க்கும்பொருட்டு உழவர் சந்தைகள் பூட்டப்பட்ட நிலையில் வேளாண் துறை சார்பில் மாநகராட்சி பூங்காக்களில் தற்காலிக உழவர் சந்தைகள் இயங்கிவருகின்றன.