தமிழ்நாடு காவல் துறையில் பணிபுரியும் காவலர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் மாநில காவல் துறை நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, காவல் துறையினர் தங்களது பிறந்தநாளுக்கு விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்று தென் மண்டல ஐஜி முருகன் சமீபத்தில் அறிவித்திருந்தார்.
காவலர்கள் பிறந்தநாளுக்கு விடுமுறை: ஐஜி உத்தரவு நிறைவேறியது! - ஐஜி உத்தரவின் பேரில் காவளருக்கு விடுமுறை
திருநெல்வேலி: ஐஜி, எஸ்பி உத்தரவைத் தொடர்ந்து நெல்லையில் காவலரின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு இன்று (செப்டம்பர் 13) விடுமுறை அளிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டத்தில் காவல் துறையினர், தங்கள் பிறந்தநாளன்று விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் அறிவித்தார். மேலும் பிறந்தநாளுக்கு முந்தைய தினத்தன்று காவல் நிலையத்தில் அனைவரும் சம்பந்தப்பட்ட காவலருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
எஸ்பி உத்தரவைத் தொடர்ந்து, நெல்லை மாவட்டம் சுத்தமல்லி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் காவலர் ரவிசங்கருக்கு நள்ளிரவு 12 மணிக்கு காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் சித்ரா தலைமையில் சக காவலர்கள், கேக் வெட்டி பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்தனர்.