திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் விசாரணை கைதிகளை பல்படுங்கிய விவகாரம் தொடர்பாக விசாரணையின் சிறப்பு அதிகாரி அமுதா நெல்லையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் உதவி ஆட்சியரிடம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விசாரணை கைதிகளாக வந்த 30க்கும் மேற்பட்டோரை அம்பாசமுத்திரம் ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங் பல் பிடுங்கியதாக கூறப்படும் விவகாரம் சூடு பிடிக்க தொடங்கியது.
இந்த பிரச்னை தொடர்பாக ஏஎஸ்பி பல்வீர் சிங் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சரவணன் உள்ளிட்ட 11 பேர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். மாவட்ட ஆட்சியர் சேரன்மாதேவி உதவி ஆட்சியர் முகமது சபீர் ஆலம் கொண்டு விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
அவர் முதற்கட்ட விசாரணை முடித்து மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தார். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மேல் அதிகாரி ஒருவரைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசை கேட்டுக் கொண்டார். அதன்படி தமிழ்நாடு அரசு சிறப்பு அதிகாரி அமுதாவை விசாரணை அதிகாரியாக போட்டது விசாரணை அதிகாரி அமுதா இன்று சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த தூத்துக்குடியில் இருந்து காரில் நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள சுற்றுலா மாளிகைக்கு சென்றார்.
சுற்றுலா மாளிகைக்க வந்த விசாரணை அதிகாரியை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் சேரன்மாதேவி உதவி ஆட்சியர் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தி வருகிறார். முதற்கட்டத்தில் நடைபெற்ற விசாரணையை குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் உதவி ஆட்சியர் லேப்டாப் மற்றும் முக்கிய ஆவணங்களுடன் விசாரணை அதிகாரியிடம் விளக்கி கூறி வருகிறார்கள்.
முதற்கட்ட விசாரணையில் என்னென்ன நடந்துள்ளது என்பதை முழு விவரமாக அறிக்கையாக விசாரணை அதிகாரி அமுதாவிடம் ஒப்படைக்கப்பட்டது அடுத்த கட்டமாக விசாரணை தொடங்குவது எப்போது திருநெல்வேலி விசாரணை நடத்தலாமா சேரன்மாதேவி நடத்தலாமா என்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க:மாடு மேய்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. வேலூரில் நிகழ்ந்த பகீர் சம்பவம்!