நெல்லை:முக்கூடல் அருகே ஓ.துலுக்கப்பட்டியை சேர்ந்தவர் எடிசன். 23 வயதாகும் இவர் மும்பையில் வேலைப்பார்த்து வந்த நிலையில், விடுமுறையையொட்டி சொந்த ஊருக்கு வந்துள்ளார். அவர் நண்பர்களோடு முக்கூடலில் உள்ள ஓட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளார். அப்போது அவருக்கு எதிரே டேபிளில் செண்பகம் என்பவர் தனது குடும்பத்தினரோடு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் எடிசன் மற்றும் அவரது நண்பர்கள் செண்பகத்தின் மனைவியை கேலி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த செண்பகத்திற்கும் எடிசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த காட்சி அந்த ஓட்டலில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.
தொடர்ந்து இருதரப்பினரையும் உணவக ஊழியர்கள் சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். வீட்டிற்கு சென்ற நிலையில் எடிசனின் ஊருக்கு செண்பகத்தின் அண்ணன் கணேசன் என்பவர் சென்று எடிசனை சரமாரியாக அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.
ஓட்டலில் மனைவியை கேலி செய்தவர்களுக்கு தர்ம அடி ; கோஷ்டி மோதல் - சிசிடிவி காட்சி தொடர்ந்து படுகாயமடைந்த எடிசனை அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக முக்கூடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக பாப்பாக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் உணவகத்தில் இரண்டு பேரும் வாக்குவாதம் செய்து சண்டையிடும் காட்சி வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:Video: 2ஆவது திருமணம் செய்த கணவரை வெளுத்து வாங்கிய முதல் மனைவி!