தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குழந்தை இல்லாத விரக்தியில் கணவன், மனைவி தற்கொலை - Tirunelveli District News

திருநெல்வேலி: குழந்தை இல்லாத விரக்தியில் கணவன், மனைவி தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குழந்தை இல்லாத விரக்தியில் கணவன், மனைவி தற்கொலை
குழந்தை இல்லாத விரக்தியில் கணவன், மனைவி தற்கொலை

By

Published : Sep 26, 2020, 1:05 PM IST

திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் நல்மேய்ப்ப நகரைச் சேர்ந்தவர்கள் மாரியப்பன், வடிவு தம்பதி. மாரியப்பன் பெயிண்டர் வேலை செய்து வந்தார்.

இன்று (செப்.26) காலை இருவரும் நீண்ட நேரமாகியும் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் ஜன்னலை திறந்து பார்த்துள்ளனர்.

அப்போது வீட்டு படுக்கை அறையில் மாரியப்பன், வடிவு சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் இருந்தனர். உடனே இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் தம்பதி உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல்கட்ட விசாரணையில், "தம்பதிக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. எனவே அவர்கள் மனவேதனையில் இருந்து வந்துள்ளனர்.

ஏற்கனவே மூன்று முறை வடிவுக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் வடிவு 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு வடிவு வீட்டில் கால் தவறி விழுந்ததில் அவருக்கு மீண்டும் கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்" என்பது தெரியவந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details