தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லை ஆட்சியருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

திருநெல்வேலி: தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த கரோனோ நோயாளியின் உடலை வழங்க கூடுதலாக 4 லட்சம் ரூபாய் கேட்ட விவகாரம் தொடர்பாக நெல்லை ஆட்சியருக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

death
death

By

Published : Sep 3, 2020, 9:41 AM IST

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தைச் சேர்ந்த முத்தையா என்பவர் கடந்த மாதம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நெல்லை சந்திப்பில் உள்ள ஷீபா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கரோனா சிகிச்சைக்காக அவரது குடும்பத்தினர் ஏழு லட்சம் ரூபாய் வரை செலவழித்துள்ளனர்.

ஆனால், மருத்துவமனை நிர்வாகம் சிகிச்சை தொடர்பான மருத்துவ அறிக்கை எதுவும் தரவில்லை. இந்நிலையில், கடந்த மாதம் 30ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி முத்தையா உயிரிழந்தார். அவர் உயிரிழந்த நிலையில், கூடுதலாக நான்கு லட்சம் கட்டினால்தான் உடலைத் தருவோம் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால், முத்தையாவின் உறவினர்களுக்கும், மருத்துவமனை நிர்வாகத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனைக் கண்டித்து இறந்தவரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சுமுகப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு முத்தையாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இது குறித்து செய்தியறிந்த மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து இச்சம்பவம் தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஆட்சியர் ஷில்பா பிரபாகருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதையும் படிங்க:பறவையுளுடன் பழகும் கேரளத்துகாரர்!

ABOUT THE AUTHOR

...view details