தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விடுமுறைகால சதுரங்கப் போட்டி - ஆர்வத்துடன் பங்கேற்ற பள்ளி மாணவர்கள் - சதுரங்கப்போட்டி

தென்காசி: வ.உ.சி. நினைவு வட்டார நூலகத்தில் பள்ளி விடுமுறைகால சதுரங்கப்போட்டியில் பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர்.

Tenkasi chess competition
Tenkasi chess competition

By

Published : Jan 3, 2020, 7:13 AM IST

தென்காசி மாவட்டத்திலுள்ள வ.உ.சி. நினைவு வட்டார நூலகத்தில் நடைபெற்ற பள்ளி விடுமுறைகால சதுரங்கப்போட்டியில் 20 பள்ளிகளிலிருந்து 67 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். ஒன்று முதல் 5ஆம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 6 முதல் 8ஆம் வகுப்பு வரை மற்றொரு பிரிவாகவும் போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் 5ஆம் வகுப்பு வரை உள்ள பிரிவில், நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர் சஞ்சீவ் பாலா முதல் பரிசும், அன்னை வேளாங்கன்னி பள்ளி மாணவி மலரிதழ் இரண்டாம் பரிசும், எஸ்.எம.ஏ. மெட்ரிக் பள்ளி மாணவன் வித்யோஸ் மூன்றாம் பரிசும் பெற்றனர்.

விடுமுறைகால சதுரங்கப்போட்டியில் பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்பு

அதேபோல் 6ஆவது முதல் 8ஆம் வகுப்பு வரையிலான பிரிவில் எஸ்.எம்.ஏ. மெட்ரிக் பள்ளி மாணவன் விஜேஷ் முதல் பரிசும் ஹில்டன் பள்ளி மாணவன் கார்த்திக் ராகுல் இரண்டாம் பரிசும், வீரமாமுனிவர் மேல்நிலைப் பள்ளி மாணவன் சுபாஷ் மூன்றாம் பரிசும் பெற்றனர். இப்போட்டியில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: இலவச கூடைப்பந்தாட்டப் பயிற்சி முகாம் - மாணவர்கள் ஆர்வம்!

ABOUT THE AUTHOR

...view details