தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்து ஆலயங்களை மீட்காவிட்டால்; உண்டியலை எண்ணவிட மாட்டோம் - இந்து மக்கள் கட்சி ஆவேசம் - இந்து அறநிலைத்துறை

திருநெல்வேலி: அறநிலையத்துறையிடம் இருந்து இந்து ஆலயங்களை மீட்காவிட்டால் கோயில் உண்டியல்களை எண்ணவிட மாட்டோம் என இந்து மக்கள் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

இந்து மக்கள் கட்சியினர்
இந்து மக்கள் கட்சியினர்

By

Published : Sep 22, 2020, 8:33 AM IST

தமிழ்நாடு முழுதும் உள்ள இந்து ஆலயங்களை அறநிலையத்துறையிடம் இருந்து மீட்கக்கோரியும் இந்து ஆலயங்களில் வரும் வருமானத்தை இந்துக்களுக்கே செலவு செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தியும் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியினர் மனு அளிக்க வந்தனர்.

இந்து மக்கள் கட்சியின் தென்மண்டல செயலாளர் ராஜபாண்டியன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் ஊர்வலமாக வந்தனர்.

பின்னர் அவர்கள் ஆட்சியர் அலுவலக நுழைவுவாயில் அருகில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக்ரோஷமுடன் முழக்கமிட்டனர். அப்போது திடீரென அவர்கள் தரையில் மண்டியிட்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதுகுறித்து ராஜபாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'தமிழ்நாடு முழுவதும் உள்ள இந்து ஆலயங்களை அறநிலையத்துறையிடம் இருந்து மீட்கக் கோரியும் இந்து ஆலயங்களில் கிடைக்கும் வருமானத்தை இந்துக்களுக்கே செலவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மாநிலம் முழுவதும் எங்கள் கட்சி சார்பில் (செப்டம்பர் 21) ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்து ஆலயங்களில் கிடைக்கும் வருமானத்தை இந்து ஏழை மாணவர்களின் கல்விக்கு செலவு செய்ய வேண்டும். ஏழை விதவைப் பெண்களின் மறுவாழ்வுக்கு செலவு செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

ஆலயங்களில் பணிபுரியும் அர்ச்சகருக்கு குறைந்த அளவு சம்பளத்தைக் கொடுத்து விட்டு அறநிலையத்துறை அலுவலர்களுக்கு பல ஆயிரம் சம்பளம் கொடுக்கின்றனர். எனவே, இந்து ஆலயங்களை அவர்களிடம் இருந்து மீட்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லாவிட்டால் திருச்செந்தூர், பழனி உள்ளிட்ட கோயில்களில் உண்டியலை எண்ண விடமாட்டோம். தொடர்ந்து அடுத்தடுத்த போராட்டத்தை நடத்துவோம்' என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details