திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள மணிமுத்தாறு, பாபநாசம் ஆகிய அணைகள் முழு கொள்ளவை எட்டியது.
தொடர் மழை பெய்து வருவதால் இந்த அணைகளில் இருந்து இன்று (ஜன.12) காலை 32,000 கனஅடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
தேசிய பேரிடர் மீட்பு படை வருகை தற்போது கனமழையாக மாறியதால் 40,000 கனஅடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படை வரவழைக்க மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவிட்டார்.
இந்நிலையில், நந்தகுமார் தலைமையிலான 50 பேர் அடங்கிய 2 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் திருநெல்வேலி வந்துள்ளனர்.
இதையும் படிங்க: மூன்று மாவட்டங்களில் மிக கன மழை எச்சரிக்கை' - சென்னை வானிலை ஆய்வு மையம்