தமிழ்நாட்டில் ஐந்து நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று (நவ.12) பிற்பகல் முதல் பரவலாக மழை பெய்தது.
மாநகர் பகுதிகளான டவுன், ஜங்ஷன், வண்ணாரப்பேட்டை, புதிய பேருந்து நிலையம், பாளையங்கோட்டை உள்ளிட்ட இடங்களில் சுமார் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து இரவு வரை திருநெல்வேலியில் விட்டுவிட்டு மிதமான மழை பெய்தது.
புறநகர் பகுதிகளான சுத்தமல்லி, வீரவநல்லூர், பத்தமடை, கங்கைகொண்டான், தச்சநல்லூர் உள்ளிட்ட இடங்களிலும் மிதமான மழை பெய்தது. இரண்டாவது நாளாக இன்று (நவ.13) திருநெல்வேலி மாவட்டத்தில் காலை முதல் மழை பெய்து வருகின்றது.