நெல்லை மாவட்டம் மேலமாவடியைச் சேர்ந்த இளையபெருமாள் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், 'மாவடி கிராமத்தில் 2,500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் காமராஜரின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு காமராஜர் பிறந்த நாளையொட்டி, எங்கள் கிராமத்தில் பிரதான சாலையில் மூன்று அடி உயரம் உள்ள காமராஜர் சிலையை வைக்கத் திட்டமிட்டிருந்தோம்.
ஆட்சியர் பரிசீலிக்க உத்தரவு:அதற்காக, அனுமதிகோரி அலுவலர்களிடம் முறையாக மனு அளித்தும், இதுவரை எவ்விதப் பதிலும் வழங்கப்படவில்லை. இங்கு சிலை வைப்பதால் எவ்வித சட்ட பிரச்னையும் ஏற்படாது. ஆகவே, மாவடி கிராம பிரதான சாலையில் காமராஜரின் மூன்றடி உயர சிலை வைக்க அனுமதித்து உத்தரவிட வேண்டும்' எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ் மனுதாரரின் மனுவை நெல்லை மாவட்ட ஆட்சியர் பரிசீலித்து உரிய முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.
இதையும் படிங்க: கிராமி விருது விழாவில் மகனுடன் ஏஆர்.ரகுமான் - வைரலாகும் புகைப்படம்!