பனங்காட்டுப்படை கட்சியைச் சேர்ந்த ஹரி நாடார் ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
தேர்தல் முடிவு வெளியான ஓரிரு நாட்களில் கர்நாடக மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் அளித்த பண மோசடிப் புகாரின் பேரில் திருவனந்தபுரத்தில் தலைமறைவாக இருந்த ஹரி நாடாரை கர்நாடக போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்தச் சூழ்நிலையில் குஜராத் மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மேலும் இரண்டு தொழிலதிபர்கள் ஹரி நாடார் மீது சென்னையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர்.
அதில், வங்கியில் குறைந்த வட்டியில் 100 கோடி ரூபாய் கடன் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.5 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொழிலதிபர்கள் தெரிவித்திருந்தனர்.