தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவல்துறையை கண்டித்து ஹெச்.ராஜா ஆர்ப்பாட்டம்! - ராஜா

நெல்லை: இந்துக்களுக்கு எதிராக செயல்படுவதாகக் கூறி காவல் அலுவலர்களைக் கண்டித்து ஹெச். ராஜா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராஜா

By

Published : Jul 10, 2019, 2:22 PM IST

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா தலைமையில் காவல் அலுவலர்களைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் இந்து முன்னணி, விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்பினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். நெல்லை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கோகுலகிருஷ்ணன், ஆய்வாளர் ஆடிவேல், ஆய்வாளர் சுரேஷ்குமார் ஆகியோரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பேசிய ஹெச். ராஜா, இந்தியாவின் வலிமையான மதமான இந்துத்துவாவை பயங்கரவாத அமைப்பாக பார்ப்பதை கைவிடுமாறும், இல்லையெனில் மிகப்பெரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் காவல்துறை அலுவலர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

ஆர்ப்பாட்டத்தில் ஹெச். ராஜா பேச்சு

மேலும், கடந்த ஆண்டு நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் கலவரத்தின்போது கையாண்ட விதத்தை முற்றிலும் கைவிட்டு, இந்த வருட விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை எந்த வித அசம்பாவிதமும் இன்றி பாதுகாப்பாக நடைபெற காவல் துறை ஒத்துழைக்க வேண்டும் எனவும் ஹெச். ராஜா வலியுறுத்தினார்.

ABOUT THE AUTHOR

...view details