தென்காசி மாவட்டம் குணரமனல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட புல்லுக்காட்டு வலசை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுமார் 350க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இப்பள்ளி கட்டம் தற்போது இடிந்து விழும் தருவாயில் உள்ளது.
சிதிலமடைந்த அரசுப்பள்ளி, சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை - Government School in tenkasi damage stage
தென்காசி: புல்லுக்காட்டு வலசை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடிந்து விழும் நிலையில் உள்ளதால் தமிழ்நாடு அரசு புதிய கட்டடம் கட்டித் தரக்கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
![சிதிலமடைந்த அரசுப்பள்ளி, சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5111715-thumbnail-3x2-tnl.jpg)
கடந்த 2010 ஆம் ஆண்டு 2 லட்சத்து 20 ஆயிரம் செலவில் கட்டடம் சீரமைக்கப்பட்டது. இருப்பினும் தற்போது இந்த கட்டடம் சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் ஆசிரியர்கள் பள்ளி குழந்தைகளை பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தடியில் வைத்து பாடம் சொல்லித் தருகின்றனர். இதை கண்ட ஊர் பொதுமக்கள் கல்வித்துறைக்கு பலமுறை புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.
ஆகவே பள்ளியில் பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன் தமிழ்நாடு அரசு இதனை கவனத்தில் கொண்டு புதிய கட்டடத்தைக் கட்டித்தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: டெங்கு காய்ச்சலா! மாணவர்கள் 7 நாட்கள் பள்ளிக்கு செல்லவேண்டாம்..!