தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருத்துவர், செவிலியர்களுக்கு கரோனா: மூடப்பட்ட அரசு மருத்துவமனை - கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து அரசு மருத்துவமனை மூடல்

நெல்லை மாவட்டம் கல்லூர் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட சிலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து அரசு மருத்துவமனை மூடப்பட்டது.

Government Hospital Closed for doctors and Nurses affected corona in nellai
Government Hospital Closed for doctors and Nurses affected corona in nellai

By

Published : Apr 22, 2021, 5:35 PM IST

நெல்லை மாவட்டத்தில் தினமும் 300க்கும் மேற்பட்டோர் கரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று ஒரே நாளில் மட்டும் மாவட்டம் முழுவதும் 491 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத வகையில் தொற்று பாதிப்பு 500-ஐ நெருங்கியதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், நெல்லை அருகே கரோனாவால் அரசு மருத்துவமனை மூடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நெல்லை மாவட்டம் கல்லூரில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட 6 பேர் கரோனா உறுதிசெய்யப்பட்டது.

மூடப்பட்ட அரசு மருத்துவமனை

இதையடுத்து கல்லூர் அரசு மருத்துவமனை மூடப்பட்டுள்ளது. அங்கு சுகாதார ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தினர்.

நெல்லை அரசு மருத்துவமனை மூடல்

ABOUT THE AUTHOR

...view details