தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் தங்க விளக்கு தீபம் - Nellaipar Temple

நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே ஏற்றப்படும் தங்க விளக்கு ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

நெல்லையப்பர் கோயிலில் தங்க விளக்கு தீபம்
நெல்லையப்பர் கோயிலில் தங்க விளக்கு தீபம்

By

Published : Jan 21, 2023, 4:12 PM IST

நெல்லை: பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோயிலில் தை அமாவாசை திருவிழா 3 நாட்கள் நடைபெறும். சுவாமி சன்னதியில் யாகபூஜை பூஜைகளுடன் தொடங்கும் இந்த திருவிழாவின் இரண்டாவது நாளில் சுவாமி சன்னதி மணி மண்டபத்தில் தங்க விளக்கு ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

நெல்லையப்பர் கோயிலில் தங்க விளக்கு தீபம்

அதன்படி இந்த ஆண்டின் தை அமாவாசை திருவிழா நேற்றைய தினம் சுவாமி சன்னதியில் சிறப்பு யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து திருவிழாவின் இரண்டாவது நாளான இன்று(ஜன.21) காலையில் சிறப்பு யாகசாலை பூஜைகளும், சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே ஏற்றப்படும் தங்க விளக்கு கோயில் கருவூலத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுக்கப்பட்டு சுவாமி மூலஸ்தானத்தில் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுவாமி சன்னதியில் இருந்து தங்க விளக்கு ஊர்வலமாக கோயில் உட்பிரகாரத்தில் எடுத்து வரப்பட்டு சுவாமி கோயில் மணி மண்டபத்தில் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் தங்க விளக்கு ஏற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து சிறப்பு பூஜைகளும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா பத்ரதீபம் ஏற்றும் நிகழ்ச்சி நாளைய தினம் மாலையில் கோயில் தங்கக் கொடிமரம் முன்பு நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து கோயில் முழுவதும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விளக்குகள் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகளும் இரவில் சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் சுப்பிரமணியர் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும்.

இதையும் படிங்க:குண்டம் திருவிழாவை முன்னிட்டு 85 அடி உயர கொடிக்கம்பம் நடப்பட்டது

ABOUT THE AUTHOR

...view details