தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான்' - ஜி.கே. வாசன் - முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான்

திருநெல்வேலி: முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியைத்தான் ஆதரிப்போம் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன்
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன்

By

Published : Jan 2, 2021, 4:12 PM IST

திருநெல்வேலியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மண்டல நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் கலந்துகொண்டு சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை கட்சியினருக்கு வழங்கினார்.

முன்னதாக அவர் சுப்பிரமணியம் தனியார் விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "இந்தப் புத்தாண்டு முதல் மண்டல வாரியாக மாநில, மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு நடந்துவருகிறது. முதல் கூட்டமாக தென்மாவட்டங்களின் நிர்வாகிகள் சந்திப்பு திருநெல்வேலியில் நடந்துவருகிறது.

முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான்

அதிமுக கூட்டணியில் தமாகா தொடர்ந்து அங்கமாக உள்ளது. அதிமுக கூட்டணி வெற்றிக் கூட்டணி, எதிரில் இருக்கும் திமுக கூட்டணி தோல்வியைத் தழுவும் கூட்டணி.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றிபெறும். தமாகா முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என ஏற்றுக்கொண்டு செயல்படுகிறது.

முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான்

எங்களது பலத்திற்கு ஏற்றவாறு எங்களுக்கான தொகுதியை கூட்டணி தலைமையிடம் கேட்டுப்பெறுவோம். நடிகர் ரஜினி அரசியலுக்கு வராதது எந்த அரசியல் கட்சிக்கும் நன்மை தீமை என்பதை விட, அவரது உடல் நலத்திற்கு நன்மை" எனக் கூறினார்.

இதையும் படிங்க: 3ஆவது முறை ஆட்சியே இலக்கு: ராமநாதபுரத்தில் எடப்பாடி...!

ABOUT THE AUTHOR

...view details